ஓட்டு போட்டால் தோசை, காபி, வைஃபை இலவசம் - கர்நாடகாவில் ருசிகரம்

சனி, 12 மே 2018 (09:32 IST)
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறை வாக்களிப்பவர்கள், மை தடவிய கையை காட்டினால் மசால் தோசை, காபி இலவசமாக வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று தெரிவித்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலர், அரசியலிலும் வாக்களிப்பதிலும் நாட்டமில்லாததால் பலர் வாக்களிப்பதையே புறக்கனிக்கின்றனர். ஆனால் இளைஞர்களுக்கு தெரிவதில்லை அவர்கள் நினைத்தால் எப்பேர்ப்பட்ட மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்று.
 
பெற்றோர்கள் வாக்களித்தால் குழந்தைகளுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், பெங்களூருவில்  ஹோட்டல் நடத்தி வரும் கிருஷ்ணராஜ் என்பவர், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலைக் காட்டினால், மசால் தோசையும் காபியும் இலவசமாக வழங்கப்படும். மற்ற வாக்காளர்களுக்கு காபி மட்டும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து பேசிய அவர் தான் எந்த கட்சியையையும் சார்ந்தவன் இல்லை என்றும் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்குவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்