உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றார்.
அப்பெண்ணை சோதித்த மருத்துவர், ஒரு களிம்பை கொடுத்து, பக்கத்தில் உள்ள அறைக்கு சென்று, அதை வயிற்றில் தடவி விட்டு வரும்படி கூறியுள்ளார். அப்பெண்ணும் அங்கு சென்று களிம்பை தடவியுள்ளார். அப்போது அந்த அறையின் கூறைப்பகுதியில், ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.