இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லறை பணப் பரிவர்த்தனைக்காக டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1 முதல் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பணத்தை நாடு முழுவதும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் டிஜிட்டல் கரன்சி புழக்கத்துக்கு வர உள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.