ஹரியானா மாநில குர்கான் நகர துணை மேயர் மீது பாலியல் பலாத்கார புகார்

செவ்வாய், 3 நவம்பர் 2015 (12:57 IST)
ஹரியானா மாநில குர்கான் நகர துணை மேயர் மீது பெண் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


 
 
ஹரியானா மாநிலம் குர்கான் நகர துணை மேயராக இருப்பவர் பர்மிந்தர் கட்டாரியா. 42 வயதுடைய 
இவரது அலுவலகத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஓராண்டு காலமாக ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில், இவர்  அக்டோபர் மாதம் குர்கான் காவல் நிலையத்தில், துணை மேயர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.
 
அந்த புகாரில், "கணவர் விவாகரத்து செய்ததால் தனியாக வசிக்கும் நான் குர்கான் துணை மேயர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
 
அப்போது துணை மேயர் கட்டாரியா என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி கடந்த 6 மாதமாக என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
 
ஆனால் திடீரென அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
மேலும் இது குறித்து, வெளியில் சொல்லக்கூடாது என்று துணை மேயரும் அவரது ஆட்களும் தன்னை மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துணை மேயர் கட்டாரியா மீது பெண்ணை ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, பாலியல் பலாத்காரம், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் உதவி ஆணையர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், துணை மேயர் கட்டாரியா விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்