ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலி: கோதுமை விலை உயர்வு!

திங்கள், 9 மே 2022 (10:21 IST)
உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். ஏராளமான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
 
ரஷ்யா - உக்ரைன் போரால் உலக நாடுகளில் விலைவாசியும் உயர்ந்துள்ளது. ஆம், உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. உக்ரைன் போர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81 % உயர்ந்துள்ளது. சென்னையில் கோதுமை சில்லறை விலை ரூ.34, மும்பையில் ரூ.49, கொல்கத்தாவில் ரூ.29, டெல்லியில் ரூ.27 ஆக உள்ளது.
 
கோதுமையின் விலை உயர்ந்துள்ளதால் பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்