டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன
ஏற்கனவே பாஜக, ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியாகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் இதோ:
* மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும்.
* 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
* ரூ. 25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு.
* இலவச ரேசன் பொருட்கள் (5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, ஒரு கிலோ சமையல் எண்ணெய், 6 கிலோ பருப்பு, 250 தேயிலை) வழங்கப்படும்.
* படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதம் 8,500 ரூபாய் என்ற வகையில் நிதி உதவி வழங்கப்படும்.
* மாநிலம் முழுவதும் 100 இந்திரா கேன்டீன் தொடங்கப்பட்டு, 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும்.
* காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் டெல்லியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.*
* டெல்லியின் கிழக்குப் (Purvanchalis) பகுதிக்கு என தனி அமைச்சகம் தொடங்கப்படும்.
* அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில், 3-ம் பாலினத்தினருக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கவும், அவர்களை உள்ளடக்குவதை உறுதி செய்யவும், மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் மறுபரிசீலனை செய்யப்படும்.