ஜனாதிபதி மாளிகையில் கொடிய விலங்கா? டெல்லி காவல்துறை விளக்கம்

Siva

செவ்வாய், 11 ஜூன் 2024 (07:50 IST)
ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும்போது பின்னால் ஒரு விலங்கு நடந்து சென்றது போன்ற காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை எடுத்து இது குறித்து டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
 
நேற்று முன் தினம் பிரதமர் மோடி உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் திடீரென பதவி ஏற்பு விழாவின் பின்னணியில் ஒரு விலங்கு நடந்து செல்வதை போன்ற காட்சி இருந்தது.
 
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி ஒரு கொடிய விலங்கு ஜனாதிபதி மாளிகையில் நடமாடுவதாக செய்திகள் பார்வைய நிலையில் இது குறித்து டெல்லி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
 
ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழாவின் போது பின்னணியில் தென்பட்டது வீட்டுப் பூனை தான் என்றும் கொடிய விலங்கு போல் இருப்பதாக பேசப்பட்டது தவறான தகவல் என்றும் டெல்லி காவல்துறை கூறியுள்ளது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்