ஒரு பெட்டியில் 25 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி: டெல்லி மெட்ரோ உத்தரவு

வியாழன், 30 டிசம்பர் 2021 (22:35 IST)
இந்தியாவிலேயே டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவு வைரஸ் பரவி வருகிறது.
 
இதனை அடுத்து இந்த இரு மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக டெல்லியில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டிக்கு 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்