டெல்லி ஓட்டலில் சேலை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு: வைரலாகும் வீடியோ

ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:28 IST)
டெல்லி ஓட்டலில் சேலை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு
பாரம்பரிய இந்திய உடையான சேலை அணிந்து சென்ற பெண் ஒருவருக்கு டெல்லி ஓட்டல் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் உள்ள குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வர் சங்கீதா கே நாயக் என்பவர் சமீபத்தில் ஒரு வணிக வளாகத்தில் பிரபலமான ஓட்டல் ஒன்றுக்கு சென்றார். அப்போது அந்த ஓட்டலில் இருந்த நிர்வாகி ஒருவர் சேலை அணிந்தவர்களுக்கு தங்கள் ஓட்டலில் அனுமதி இல்லை என்று கூறினார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா, அதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் இந்த ஓட்டலில் ஒரு பாகுபாட்டை சந்தித்தது எனக்கு பெரும் அதிர்ச்சி. பாரம்பரிய உடை அணிந்த எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அனைத்து விதமான கேஸுவல் உடைகளும் அனுமதிக்கப்படும் நிலையில் பாரம்பரிய உடைக்கு அனுமதி மறுக்கப்படுவதை பார்க்கும்போது நாம் இந்தியர் என கூறிக் கொள்வதில் என்ன பெருமை உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 
சங்கீதாவின் டுவீட் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அந்த ஓட்டலின் இயக்குனர் தனது ஊழியரின் செயலுக்கு மன்னிப்பு கோரியதோடு, இனியும் இதுமாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க உறுதி கூறினார்.

@bishnoikuldeep My shocking experience with discrimination at Kylin and Ivy, Ambience Vasant Kunj this evening. Denied entry as ethnic wear is not allowed! A restaurant in India allows ‘smart casuals’ but not Indian wear! Whatever happened to pride in being Indian? Take a stand! pic.twitter.com/ZtJJ1Lfq38

— Sangeeta K Nag (@sangeetaknag) March 10, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்