இந்த நிலையில் தமிழகத்தை போலவே டெல்லி சட்டப்பேரவையிலும் ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றதற்கான காலகடுப்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்ற டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி அரசு வரும் திங்கட்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.