தலைநகர் டெல்லியில் தலைத்தூக்கும் கொரோனா!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (12:04 IST)
தற்போது மீண்டும் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,109 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,33,067 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் டெல்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட ஒமைக்ரான் பரவல் குறைந்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் உயிரிழந்திருந்தார். எனினும், இன்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்