சசிகலாவிற்கு ஆபத்து? ; சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்

வியாழன், 23 பிப்ரவரி 2017 (16:03 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டை பெற்று வரும் சசிகலா அறைக்கு அருகில் அடைக்கப்பட்டிருந்த சயனைடு மல்லிகாவை சிறைத்துறை அதிகாரிகள் வேறு சிறைக்கு மாற்றியுள்ளனர்.


 

 
சசிகலாவும், இளவரசியும் தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருக்கும் பக்கத்து அறையில் ‘சயனைடு மல்லிகா’ என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். உணவில் சயனை கலந்து கொடுத்து பல பெண்களை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டை பெற்ற அவர் நீண்ட வருடங்களாக அவர் அந்த சிறையில் இருக்கிறார். கடந்த முறை ஜெ.விம், சசிகலாவும் சிறைக்கு சென்ற போது கூட அவர் அங்குதான் இருந்தார்.  
 
எனவே, அவரால் சசிகலாவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்பிருக்கிறது எனவும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் எனவூம் அதிமுக வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். 
 
இந்நிலையில், மல்லிகாவை பெல்காம் சிறைக்கு போலீசார் மாற்றியுள்ளனர்.  சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரால் சசிகலாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், சசிகலா தகுந்த பாதுகாப்போடு இருக்கிறார் எனவும் அவர்கள் கூறினார். 
 
இதயநோய் காரணமாக, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருப்பதே வேறு சிறைக்கு மல்லிகா  மாற்றப்படுவதற்கு காரணம் என சில அதிகாரிகள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்