புதுச்சேரியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு !

திங்கள், 13 ஏப்ரல் 2020 (19:13 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை 18,65,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,15,138 பேர் உயிரிழந்துள்ளனர். 4,331,915 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவினால் இதுவரை 324 பேர் பலி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,352 ஆக அதிகரிப்பு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரித்துவருவதால், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்குமாறு பல மாநிலமுதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும், வரும்  ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்