தியேட்டர்களில் ‘அழுகை அறை’ அமைத்த கேரளா. என்ன காரணம்?

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:45 IST)
தியேட்டர்களில் ‘அழுகை அறை’ அமைத்த கேரளா. என்ன காரணம்?
கேரளாவில் அரசுக்கு சொந்தமான தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காது என்றும் குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காது என்றும் கூறப்பட்டுள்ளது
 
மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும் என்றும் அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தற்போது அரசு திரையரங்குகளில் மட்டும் இந்த அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தனியார் திரையரங்குகளிலும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்