இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவைகளில் ஒன்றான கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது 16 ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் பெற்று உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
இதுகுறித்து சீரம் நிறுவன தலைவர் அதார்பூனாவால் கூறியபோது, 16 ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகாரம் பெற்றுள்ளது தங்களுக்கு பெருமை என்றும் கூறியுள்ளார். குறிப்பாக பெல்ஜியம் பின்லாந்து, அயர்லாந்து சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்பட மொத்தம் 16 நாடுகளில் தங்களது கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகாரம் பெற்று உள்ளதாகவும் இதனை அடுத்து வேறு சில நாடுகளிலும் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அனைவருக்கும் கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை தான் அதிக நபர்கள் செலுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது