நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
வெள்ளி, 16 மே 2014 (07:02 IST)
நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16 வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வெற்றிகரகமாக நடந்து முடிந்துள்ளது.
நாடெங்கும் ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கி கடந்த 12 ஆம் தேதி வரை நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் வேளையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனவும் 5 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு நோட்டாவில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.