குஜராத்தின் உண்மை நிலவரத்தை தெரிவிக்க ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா? - கெஜ்ரிவால் கேள்வி

செவ்வாய், 6 மே 2014 (16:25 IST)
குஜராத் மாநிலத்தின் உண்மை நிலவரம் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரபரப்புக்கும், சச்சரவான கருத்துக்களுக்கும் பெயர்போன ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊடகங்கள் அனைத்தும் பெரும் தொகைக்கு விலைபோய் விட்டன என்றும், பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாற்றினார். இதைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, தான் அப்படிக் கூறவில்லை என்று பின்வாங்கினார்.
 
இந்நிலையில், பெங்களூருவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், "குஜராத்தின் உண்மை நிலவரம் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்றும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்த உண்மைத் தகவல்களை மக்கள் முன் ஊடகங்கள் கொண்டு வரவில்லை" என்றும் கேள்வியெழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்