கொரோனா :இந்தியாவில் 24 மணிநேரத்தில் 601 பேர் பாதிப்பு: 12 பேர் பலி !

சனி, 4 ஏப்ரல் 2020 (16:34 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறதுஇதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதுஉலக அளவில் கொரோனாவால், 11.30 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். 2.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.உலகில் இதுவரை 60,107 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2902  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, மும்பையில் 28 பேருக்கும்,  தானேவில் 15 பேருக்கு புதியாக  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் 411 கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில்,  கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்,தொடர்புடையவர்கள் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்