ஊரடங்கு முடிவதற்குள் ஊரு ஒரு வழி ஆகிறும்... பீதியை கிளப்பும் புள்ளிவிவரம்!

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:33 IST)
ஊரடங்கு முடிவதற்குள் 17,000 கொரோனாவால் பாதிக்கப்பட்டக்கூடும் என புள்ளி விவரம் தெரிவிக்கின்றன. 
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
அதாவது இன்னும் 7 நாட்களில் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஊரடங்கு முடியும் நாளன்று கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரக்கூடும் என புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. 
 
அதாவது, கடந்த 15 - 20 ஆம் தேதி வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆனது. அடுத்து 20 - 23 ஆம் தேதிக்குள் 3 நாட்களில் இரட்டிப்பு ஆனது. 23 - 29 தேதிகள் எண்ணிக்கை சற்று குறைந்தது. 
 
ஆனால், 29 - ஏப்ரல் 6-க்குள் பல மடங்கு உயர்ந்தது. இது இப்படியே போனால் ஏபரல் 14 ஆம் தேதி நிலையில் ஊரடங்கு முடியும் நாளன்று கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரக்கூடும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்