கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,362 பேர் பலியான நிலையில் 30,108 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 23,495 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 17,200 பேரும், டெல்லியில் 20,834 பேரும், ராஜஸ்தானில் 8,980 பேரும், மத்திய பிரதேசத்தில் 8,283 பேரும், உத்தர பிரதேசத்தில் 8,075 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.