ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு !

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (11:53 IST)
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1,31,968 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,30,60,542 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதனால் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்சமயம் 3 ல்ட்சம் த்டுப்பூசிகள் மட்டுமே இருப்பதாகவும் இது அடுத்த 2 தினங்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து மருந்துகளை வாங்கிக்கொள்ளுமாறு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்