கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள..... மருத்துவர்கள் அறிவுரை

ஞாயிறு, 27 ஜூன் 2021 (14:41 IST)
கொரொனா 3 ஆம் அலையை  எதிர்கொள்ள  2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரொனா 3 ஆம் அலையை  எதிர்கொள்ள  2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாவது:

விரையில் இந்தியாவில் வரவுள்ள கொரொனா 3 ஆம் அலையை எதிர்கொள்ள 2 ஆம் தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தினால் மட்டும்தான் 33% நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும்  2 வது தவணை போட்டிருந்தால் 90% மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்