ஒரே நாளில் 21,000 தாண்டிய தினசரி பாதிப்புகள்! - இந்தியாவில் கொரோனா!

சனி, 23 ஜூலை 2022 (10:07 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நிலவி வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

அதன்படி இன்று புதிதாக 21,411 பேர் பாதித்துள்ளனர். நேற்று முன்தினம் 21,566 நேற்று 21,880 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 21,411 ஆக குறைந்தது. இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,49,482லிருந்து 1,50,100 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு புதிதாக 67 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,997 ஆக உயர்ந்தது. கொரோனாவால் ஒரே நாளில் 20,726 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,71,653லிருந்து 4,31,92,379 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 201,68 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,78,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்