கொரோனாவால் இறந்தவரின் உடலை எரிக்க விடாததால்... பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடிய உறவினர்கள்..

செவ்வாய், 2 ஜூன் 2020 (21:17 IST)
ஜம்மு காஷ்மீரில் கொரோ வைரஸ் தொற்றால்  இறந்த அவரது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு ஓடும் பரிதாப நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது.அதைத்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்  ஜம்மு – காஷ்மீர் தோடா மாவட்டத்தில் வசித்த முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலை சொந்த் ஊருக்குக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அருகிலேயே அவரது உடலை புதைக்க முடிவு செய்தனர்.

ஆனால் கொரோனா தொற்றால்  இறந்த அவரது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு ஓடும் பரிதாப நிலை ஏற்பட்டது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்