’அயோத்தியில்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை..

சனி, 15 ஜூன் 2019 (15:31 IST)
நமது அண்டை நாடான  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மக்கள் கூடியிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தக் கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இருப்பினும் உள்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இது சம்பந்தமாக இதுவரை சந்தேகத்தின் பேரில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் ஐஎஸ்  பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக சிலரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்பிக்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்லவுள்ளனர்.
 
அதேபோல் உத்தரபிரதேச மாநில துணைமுதல்வர் கேசவ் மரியாவும் இன்று வழிபாடு செய்கிறார். மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசரின் 81 வது பிறந்த தினம் இன்று கொண்டாடபடவுள்ளது.
 
இதனையடுத்து அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.குறிப்பாக அயோத்தியில் பஸ்கள், ரயில்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தவுள்ளதாகவு, தகவல் வெளியாகிறது.இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்