இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் மேலும் கூறியதாவது: மோடி அரசின் 100 நாளில் இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவையும், கும்பல் தாக்குதல் அதிகரிப்பையும் , அரசியல் பேரங்களையும் சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதக்கள் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டது நாட்டின் 8 முக்கிய துறைகளிள் வளர்ச்சி விகிதம் 2 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார். பாஜக அரசு அலட்சியமான மற்றும் வஞ்சமான பாதையை தொடர்வதால் நாம் மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் மோடியின் 100 நாள் ஆட்சியில் கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் ஆகியவையே அதிகம் இருந்ததாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆனால் மத்திய அமைச்சர்கள் மோடி தலைமையிலான அரசு மிகச்சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.