7 ஆண்டுகளில் 70 தேர்வுகளில் வினாத்தாள் கசிவு.. காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு.. மத்திய அமைச்சர் பதில்..!

Mahendran

திங்கள், 22 ஜூலை 2024 (12:01 IST)
ஏழு ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு மத்திய கல்வி அமைச்சர் பதவி அளித்துள்ளார். 
 
நீட் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிந்து வருவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வருகிறது என்பதும் குறிப்பாக டெக்னாலஜி அதிகரித்ததன் காரணமாக மிக எளிதாக வினாத்தாள் கசிந்து விடுகிறது என்பதும் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் வினாத்தாள் கசிவதை நிறுத்த முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஏழு ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் வினாத்தாள் கசிவுகளை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நடைபெற்றது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் பாட்னா மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில மையங்களில் மட்டுமே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும் அதனை தடுக்க மத்திய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்