நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த காங்கிரஸ் எம்பி மருத்துவமனையில் அனுமதி!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:49 IST)
நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது என்பதும் இந்த கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இன்று காலை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி கே சுரேஷ் என்பவர் கலந்து கொண்டார் 
 
இந்த கூட்டத்தை முடித்து விட்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திடீரென வழுக்கி விழுந்தார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அதன் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சுரேஷ் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் அவர் தற்போது மருத்துவமனையில் குணமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்