அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் பெரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ராமர் கோயிலுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.18.5 கோடி மதிப்பில் வாங்கியதாக சமீபத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்த புகாரால் ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள், நேற்று மேலும் ஒரு புகாரை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதாவது, ராமர் கோயிலுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டு உள்ளது.
அதாவது, அயோத்தியில் 890 மீட்டர் நிலம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய பாஜக தலைவர் ஒருவர், அதை ரூ.2.50 கோடிக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.