முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் ....அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு

வெள்ளி, 19 மார்ச் 2021 (18:30 IST)
கடந்தாண்டு கேரளாவில் தங்கம் கடத்தல் சம்பந்தமான வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் அரசு அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் மேலும் பரபரப்பு கூடியது.

இதில் முக்கிய குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரித்துவந்தனர்.

அப்போது,தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உண்டு என்று வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி ஸ்வப்பா சுரேஷைக் கட்டாயப்படுத்தியதாக கேரளா குற்றப்பிரிவு போலீஸார் இந்தியாவிலேயே முதன்முறையாக  அமலாக்கத்துறை அதிகாரிக மீது வழக்குப்பதில் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்