ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவா? வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு..!

Mahendran

செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:45 IST)
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், ஹேமந்த் சோரனின் வீடு, ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 
 சட்டவிரோத பணம் பரிமாற்று வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு அமலாக்க துறையினர் விசாரணை நடத்த சென்றனர். அப்போது முதல்வர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் இரவு வரை காத்திருந்தனர்.  இந்த நிலையில் இரவு முழுவதும் முதல்வர் வீட்டுக்கு வராததால் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து  ஹேமந்த் சோரன் வீடு மற்றும் ராஜபவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில்  14 பேர் இதுவரை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகாததால் எட்டாவது முறை சம்மன் அளிக்கப்பட்டது  ’
 
கடந்த 20ஆம் தேதி ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடத்த சென்றபோதுதான் அவர் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்