கோவிட் 19 வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுளதால் தொழில்கள் முடங்கியுள்ளன. இதில் ஆடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகளவு பன்றி வளர்ப்பு நடக்கும் மாநிலமான அசாமில், ஜோர்ஹாட், சிப்சாகர், லக்கிம்பூர், தேமாஜி மற்றும் நாகான் மாவட்டங்களில் கிளாசிக்கள் ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்குள் 1300 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
இந்த கிளாசிக்கள் ஸ்வைன் ஃப்ளு பன்றிகளுக்கு மட்டுமே தோன்றும் காய்ச்சல் எனவும் சாதாரண ஸ்வைன் ஃப்ளூ அல்லது எச்1 என்1 போன்ற காய்ச்சல்கள் போல மனிதர்களுக்கு பரவாது என்றும் அறிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.இந்த வைரஸ் காய்ச்சல் ஆண்டுதோறும் இந்த காலங்களில் பன்றிகளைத் தாக்குவது வழக்கமான ஒன்றுதான் என்றும் இந்த ஆண்டு இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிகளவிலான இறப்புகள் ஏற்பட்டுள்ளது.