இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள்; எல்லையில் போர் பதற்றம்

வெள்ளி, 7 ஜூலை 2017 (15:22 IST)
சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களுடன் கைகலப்பில் ஈடுப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
இந்தியா - பூடான் எல்லைப் பகுதியில் டோக்லாம் பீடபூமியை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் அந்த பகுதியில் சாலை அமைக்கவும் முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிக்கிம் மாநிலம் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் தடுக்க முயற்சித்த போது இருதரப்பினருக்கு இடையே கைகலப்பானது. சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் புகுந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
மேலும் இருநாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதனால் எல்லை பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.
 

நன்றி: YSRCP IT ARMY

வெப்துனியாவைப் படிக்கவும்