சன்னிலியோனை பிரியமாட்டேன்; அடம் பிடித்த குழந்தை : வைரல் வீடியோ

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (14:14 IST)
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனை விட்டு பிரியமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சன்னிலியோன் தற்போது ‘தேரா இந்தசார்’ என்ற படத்தின் நடித்து வருகிறார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. அந்த படப்பிடிப்பிற்கு ஒரு பெண்மனி தன்னுடைய குழந்தையுடன் சென்றார்.  அப்போது சன்னிலியோன் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டார்.
 
அதன்பின் அந்த யாரிடம் போக மறுத்துவிட்டது. அவரது தந்தை, தாயிடம் கூட செல்ல மறுத்து, சன்னிலியோனின் தோளிலேயே ஒய்யாரமாக படுத்துக் கொண்டது. அதை சன்னிலியோன் சிரித்துக்கொண்டே ரசித்தார்.
 
அதன்பின் ஒருவழியாக குழந்தையின் தாய் வலுக்கட்டாயமாக குழந்தை சன்னிலியோனிடமிருந்து தூக்கிச் சென்றார். 
 
இந்த வீடியோவை சன்னிலியோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் “ இந்த குழந்தை என்னை விட்டு பிரியவில்லை.. கொள்ளை அழகு” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Haha she didn't want to leave me...so cute!! pic.twitter.com/KvaRl6JB5F

— Sunny Leone (@SunnyLeone) August 20, 2016

வெப்துனியாவைப் படிக்கவும்