சுனாமியைவிட மோசமானது மோடி அலை: ப.சிதம்பரம் விமர்சனம்!!

ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (11:31 IST)
சுனாமியை விட மோசமானது பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.


 
 
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மோடி பணமதிப்பிழப்பு குறித்து அறிவித்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்த பணத்தட்டுபாடு, சில்லரை இன்மை போன்ற பிரச்சனைகள் உருவாகின.
 
இந்த முடிவை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மத்திய அரசின் இந்த செயல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
வரும் நவம்பர் 8 ஆம் தேதியோடு பணமதிப்பிழப்பு செய்து ஓராண்டு நிறைவடைகிறது. இதனை கொண்டாட பாஜக அரசு நினைத்தாலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளனர். 
 
இது குறித்து முன்னாள நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது, பணமதிப்பிழப்பு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இது சுனாமியை விட பெரும் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. 
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மிகப்பெரிய மோசடியாகும். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை தடை செய்தது தவறு என்பதை நேர்மையாக ஏற்று கொள்ள அரசு மறுக்கிறது. 
 
2019 ஆம் ஆண்டு மத்தியில் நிச்சயம் ஆட்சி மாறும். அப்போது பொறுப்பேற்கும் புதிய அரசு ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்