நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 1 என்ற விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பியது. அந்த ஆய்வின் மூலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்தன. அதன்பிறகு நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 15 ஆம் தேதி “சந்திராயன் 2” என்ற விண்கலத்தை “ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3” ராக்கெட் மூலம், அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிஹோட்டாவில் சதீஷ் தவால் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தீடிரென ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால்”சந்திராயன் 2”: விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடு நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ராக்கெடில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறுகளை விஞ்ஞானிகளும், என்ஜினியர்களும் பணியாற்றி சரி செய்து விட்டதாக சில தகவல்கள் வெளிவருகின்றன. இதனைத் தொடர்ந்து “சந்திராயன் 2” விண்கலத்தை அடுத்த வாரம், அதாவது ஜூலை 20 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்குள், ஒரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ கூறியிருப்பதாக தெரியவருகிறது.