10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!

வியாழன், 8 டிசம்பர் 2016 (16:23 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் மதக்கோட்பாடுகளை கற்க சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த 10 வயது சிறுவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உத்தரப்பிரதேச மாநிலம் முசபர்நகர் அருகே புலட் பகுதியில் இஸ்லாமிய குருகுலம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 10 வயது சிறுவனை, அவனது பெற்றோர்கள் மதக் கோட்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள சேர்த்துவிட்டு சென்றனர்.
 
ஆனால் அந்த சிறுவனுக்கு அதில் விருப்பம் இல்லை இதனால் அந்த குருகுலத்தில் உள்ளவர்கள் அவனை சங்கிலியால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்று அருகிலுள்ள கிராமம் ஒன்றில் இருந்த ஏரியில் குதித்துள்ளான்.
 
சிறுவன் ஏரியில் குதித்து தற்கொலை செய்வதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றினர். பின்னர் அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு குழந்தைகள் நல கூட்டமைப்பின் முன்னிலையில் சிறுவன் இருந்த குருகுலத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
 
இந்த விசாரணையின் போது இதில் சங்கிலியால் சிறுவன் கட்டப்படவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் சிறுவனை காப்பாற்றிய கிராம மக்கள், சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாக கூறி சிறுவன் காலில் சங்கிலி இருந்ததற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்