மன அழுத்தத்தால் தற்கொலை; 100 நாட்கள் விடுமுறை! – மத்திய அரசு திட்டம்!

திங்கள், 28 மார்ச் 2022 (08:31 IST)
இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த வீரர்களுக்கு குடும்பத்துடன் செலவளிக்க விடுமுறையை 100 நாட்களாக உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப்படைகளான சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், இந்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றில் ஏராளமான வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதீத மன உளைச்சல் காரணமாக வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதும், துப்பாக்கியால் பிறரை சுடுவதும் அதிகரித்துள்ளது. தற்போது துணை ராணுவ படையினருக்கு ஆண்டுக்கு 75 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறையை 100 நாட்களாக உயர்த்தி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வீரர்களின் மன அழுத்த பிரச்சினைகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்