புதிய குற்றவியல் சட்டம் இப்போது இல்லை: மத்திய அரசின் அறிவிப்பால் போராட்டம் வாபஸ்?

புதன், 3 ஜனவரி 2024 (07:16 IST)
புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக லாரி டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 
 
மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா என்பவர் இது குறித்து கூறிய போது புதிய குற்றவியல் சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.  
 
மத்திய அரசு இந்த அறிவிப்பை அடுத்து லாரி ஓட்டுனர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மீண்டும் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்