மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தர முடியாது: மத்திய அரசு கைவிரிப்பு

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:57 IST)
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வரும்போதே ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த நிதியை மத்திய அரசு ஒரு சில மாநிலங்களுக்கு சரிவர தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது 
 
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்க நிதி இல்லை என மத்திய அரசு திடீரென கைவிரித்து விட்டதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன
 
ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால் மாநிலங்களுக்கு இழப்பீடு தர முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருக்கும் காலங்களில் மாநிலங்களுக்கு இழப்பீடு தர வேண்டுமா? என்ற கேள்வியையும் மத்திய அரசு எழுப்பியுள்ளது. 
 
மத்திய அரசு சார்பில் ராஜ்யசபாவில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமாக பதிலில் தான் இந்த தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு 1.51 லட்சம் கோடி ஒவ்வொரு மாதமும் தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு 11 ஆயிரத்து 700 கோடி மத்திய அரசு இழப்பீடு தர வேண்டிய நிலையில் திடீரென கைவிரித்துவிட்டதால் தமிழக அரசு கடும் சிக்கலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்