கங்கை நதியில் சடலங்கள்: உ.பி., பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

ஞாயிறு, 16 மே 2021 (19:36 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களை அவர்களது உறவினர்களே பிணங்களை கங்கை நதியில் தூக்கி வீசி எறியும் சம்பவங்கள் உத்தரப்பிரதேசம் பீகார் மாநிலத்தில் அதிகம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனால் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது
 
கங்கை நதியில் சடலங்கள் வீசுவதை தடுக்க வேண்டும் என்றும் சடலங்களை பாதுகாப்பாக கையாளப்படுவது மற்றும் கண்ணியமான முறையில் தகனம் செய்வதையும் கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பீகார் உத்தரப் பிரதேச மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்