500 மற்றும் 1000 ரூபாய் இன்றோடு கடைசி: புத்தாண்டில் புதிய அறிவிப்பு; மத்திய அரசு திடீர் திருப்பம்!!

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (10:14 IST)
புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


 
 
இந்நிலையில் வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. 
 
வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும். 
 
வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு கடைசி நாளான இன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதற்கிடையே, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். 
 
மேலும், புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படலாம் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. 
 
இந்நிலையில், நாளை இரவு மோடி கடந்த நவம்பர் 8ம் தேதியை போல மீண்டும் டிவி சேனல் வாயிலாக பேசப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்