இரண்டு நாட்களில் தமிழக அரசியல் சர்ச்சைக்கு முடிவு: புதிய தகவல்!!

புதன், 15 பிப்ரவரி 2017 (12:42 IST)
தமிழக அரசியல் குழப்பம் இரண்டு அல்லது மூன்று நாளில் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.


 
 
சசிகலா உள்பட மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனை அளித்தது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரினார். இதையடுத்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.
 
இந்நிலையில், தமிழக அரசியல் குழப்பம் இரண்டு அல்லது மூன்று நாளில் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
 
மேலும், ஆட்சியமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்றும், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்