மீண்டும் வெப் சீரிஸாக உருவாகும் வீரப்பனின் பயோபிக்… இயக்குனர் ரமேஷ் தகவல்!

புதன், 23 நவம்பர் 2022 (16:25 IST)
சந்தனமரக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கை ப‌ற்ற‌ி “வனயுத்தம்” என்ற பட‌த்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். தமிழ், கன்னடத்தில் இ‌ந்த பட‌ம் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த பட‌த்‌தி‌ல் வீரப்பன் வேடத்தில் கிஷோரு‌ம், போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜுனும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமியும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் தன்னையும் தன் மகள்களையும் சித்திரிக்கும் காட்சிகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முத்துலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அ‌தி‌ல், வனயுத்தம் படத்தில் 32 காட்சிகளை நீக்க வேண்டும் என்று‌‌ம் நஷ்டஈடாக 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் முத்துலட்சுமி கேட்டிருந்தார். அதன்படி அவருக்கு 25 லட்சம்  கொடுத்து பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார் இயக்குனர் ரமேஷ்.

இந்நிலையில் இப்போது வீரப்பனின் முழுக்கதையையும் வெப் சீரிஸாக எடுக்க ஏ எம் ஆர் ரமேஷ் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முத்துலட்சுமி கர்நாடகாவில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையடுத்து 20 மணி நேரம் ஓடும் வகையில் 20 எபிசோட்களாக வெப் சீரிஸாக எடுக்க உள்ளதாக ரமேஷ் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்