ஆன்லைன் தளங்களான குயிக்கர், ஓஎல்எக்ஸ், இபே, அமேசன், ஸ்நாப்டீல், யுடியூப் போன்ற இணையதளங்கள் மூலம் அரிய வகை உயிரினங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் மாதவ் தேவ் குறிப்பிட்டார்.
மத்திய வன விலங்கு குற்றம் மற்றும் தடுப்பு புலனாய்வு அமைப்பினர் 106 இணைய தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இதில் முக்கிய ஆன்லைன் வர்த்தக தளங்களான குவிக்கர் டாட் காம், ஓஎல்எக்ஸ் டாட் இன், அலிபாபா டாட் காம், இபே டாட் காம், யுடியூப் டாட் காம், அமேசான் டாட் காம், ஷாப்பிங் ரெடிப் டாட் காம், பெட்ஸ்மார்ட் டாட் காம் மற்றும் ஸ்நாப்டீல் டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன என்று தேவ் குறிப்பிட்டார்.
இந்த இணையதளங்களின் மூலம் முதலை தலை, பதப்படுத் தப்பட்ட பாம்புகள், நட்சத்திர மீன், அரிய வண்டுகள், பட்டாம்பூச்சிகள், கடற்குதிரை போன்றவை விற்பனை செய்யப்படுவதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.