கேரளாவுக்கு இலவச கால் மற்றும் டேட்டாக்கள்: செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (20:16 IST)
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பெரும்பகுதி சிறுசிறு தீவுகளாக மாறி தொடர்புகளே துண்டுக்கப்பட்டுள்ளன. எந்தவித போக்குவரத்தும் இல்லாத நிலையில் ஒரே ஆறுதல் இன்னும் ஒருசில செல்போன்களின் நெட்வொர்க்குகள் இயங்கி வருவதுதான். இதன் மூலம் தான் பிறரிடம் உதவி கேட்க முடிகிறது.
 
அதிலும் பிரிபெய்ட் சிம் வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கேரள மக்களுக்கு சில செல்போன் நிறுவனங்கள் இலவச அழைப்பு மற்றும் இலவச டேட்டா வசதிகளை அளித்துள்ளன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஜியோ, பிஎஸ்என்எல் ஆகிய செல்போன் நிறுவனங்கள் கேரளா முழுவதிலும் உள்ள மக்கள் செல்போன்களில் கட்டணமில்லாமல் பேசிக்கொள்ளலாம் என்றும், இணையத்தை தேவையான அளவு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
 
இந்த அறிவிப்பு வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பதால் கேரள மக்கள் செல்போன் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்