6 மாதங்களில் சாதி, மத மோதல்கள் அதிகரித்துள்ளது - உள்துறை அமைச்சகம் தகவல்

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (19:18 IST)
இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களாக சாதி, மத மோதல்கள் அதிரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.
 

 
உள்துறை அமைச்சகம் நாட்டில் நடக்கும் மோதல் தொடர்பான புள்ளி விவர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2014ஆம் ஆண்டை விட சாதி மத மோதல்கள் அதிரித்துள்ளதாகவும், இதில் உத்திரப் பிரதேசம் மாநிலம் அதிக வன்முறைகளை சந்தித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையின்படி, 2015ஆம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் மொத்தம் 330 மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்து 92 பேர் காயமுற்றுள்ளனர். 2014ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது போன்று 252 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.
 
அந்த ஆண்டின் முதல் 6 மாதங்களி்ல் 33 பேர் மட்டும் இறந்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மொத்தம் 644 மோதல்கள் நடந்ததாகவும், இதில் மொத்தம் 95 பேர் கொல்லப்பட்னர். ஆயிரத்து 921 பேர் காயமுற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 68 மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், அதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 224 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்