அதிகமாகும் கார், பைக்குகளின் விலை – ஆகஸ்ட் 1 முதல் அமல் !

வியாழன், 25 ஜூலை 2019 (14:24 IST)
வாகன உற்பத்தி பாகங்களின் விலைகள் அதிகமாகியுள்ளதால ஆகஸ்ட் 1 முதல் கார்களின் விலை அதிகமாக இருக்கிறது.

கார் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தையில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதனால் கார் கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை அமைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் இப்போது இந்தியாவில் வாகனத் தயாரிப்புக்கான உதிரிப் பாகங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, வாகன எஞ்சின்களுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி செல்வுகள் அதிகமாகி உள்ளன.

இதனால் கார் நிறுவனங்கள் கார்களின் விலையை அதிகமாக்க இருக்கின்றன. இதனால் மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 1 முதல் 3 சதவீதம் வரை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேப்போல இரு சக்கர வாகனங்களின் விலையும் ஒரு சதவீதம் வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்