கால்வாய்க்குள் கவிழ்ந்து பேருந்து விபத்து; 10 பேர் பலி : தெலுங்கானாவில் சோகம்

திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (11:20 IST)
தெலுங்கானாவில், சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, கால்வாய்க்குள் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலுங்கானா மாநிலம், காக்கிநாடாவில் இருந்து சுமார் 30 பேரை ஏற்றிக் கொண்டு, ஒரு தனியார் பேருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தடுமாறி பக்கவாட்டிலுள்ள நாகார்ஜீனா சாகர் கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சித் திணறி 10 பேர் இறந்துவிட்டனர். மேலும் காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்