மக்கள் குடியிருந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது : அதிர்ச்சி வீடியோ

புதன், 11 மே 2016 (10:30 IST)
பிகார் மாநிலம் ஷியோகர் மாவட்டத்தில், மக்கள் குடியிருக்கும் ஒரு அடுக்கு மாடிகட்டிடம் திடீரென இடிந்து விழும் வீடியோ வெளியாகியிருக்கிறது. மேலும் அதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


 

 
திடீரென அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இந்த தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினரும், காவல் துறையினரும் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். 
 
இடிபாடுகளில் சிக்கி எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளி வரவில்லை. ஆனால், ஏராளமானோர் பலத்த காயம் அடைந்திருக்கலாம் மற்றும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
அந்த கட்டிடம் சரியும் நிகழ்வை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
 

Courtesy : Times now Tv

வெப்துனியாவைப் படிக்கவும்